Breaking News

ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் “வால்ட் டிஸ்னி!

ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் “வால்ட் டிஸ்னி!

 

அமெரிக்காவின் orlando மாகாணத்திலுள்ள பொழுது போக்கு பூங்காவனமான வால்ட் டிஸ்னி( Walt Disney ) நிறுவனத்தில் இருந்து சுமார் 32ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

அதன்படி கடந்த மார்ச் மாதம் உலகம் முழுவதும் கொரோனாத் தொற்றுக்காரணமாக பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டது. அப்போது டிஸ்னி லாண்டும் மூடப்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள இதன் கிளைகள் மூடப்பட்டன.

 

மேலும் ,இதன் காரணமாக பொருளாதார சிக்கலில் தவித்து வந்த டிஸ்னி நிறுவனம் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. முதலில் 28ஆயிரம் பேர் நீக்கப்படுவர் என்ற அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 32ஆயிரமாக உயர்ந்துள்ளது.