Breaking News

டைரக்டர் ஷங்கர் பிறந்தநாள் - யாரோட கொண்டாடியிருக்காரு பாருங்க..!!

டைரக்டர் ஷங்கர் பிறந்தநாள் - யாரோட கொண்டாடியிருக்காரு பாருங்க..!!

பிரம்மாண்டங்களின் இயக்குநர் என்று சர்வதேச அளவில் கொண்டாடப்படும் இயக்குநர் ஷங்கர் தற்போது கமலின் இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த ஆண்டில் படம் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக தெலுங்கில் ராம்சரணுடன் கூட்டணி அமைத்தார் ஷங்கர். அவரது கேம் சேஞ்சர் படத்தில் கமிட்டாகி சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்த நேரத்தில் இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கும் துவங்கப்பட்ட நிலையில், இரண்டு படங்களின் சூட்டிங்கையும் ஒரே நேரத்தில் சிறப்பாக கையாண்டார் ஷங்கர்.

தற்போது இரு படங்களின் சூட்டிங்கும் ஏறக்குறைய இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த ஆண்டில் இரு படங்களும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் ஷங்கர். இதையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களிலும் நேரிலும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

இதனிடையே தன்னுடைய பிறந்தநாளை கேம் சேஞ்சர் படக்குழுவினருடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார் ஷங்கர். இந்தக் கொண்டாட்டத்தில் ஷங்கருடன் நடிகர் ராம் சரண் மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜூ பங்கேற்றுள்ளனர். இதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.