Breaking News

மறைந்த இயக்குநர் சித்திக்கின் வீட்டிற்கு சென்ற சூர்யா...!!

மறைந்த இயக்குநர் சித்திக்கின் வீட்டிற்கு சென்ற சூர்யா...!!

விஜய், சூர்யா, வடிவேலு உள்ளிட்டோரை வைத்து ப்ரெண்ட்ஸ் படத்தை இயக்கிய மலையாள இயக்குநரான சித்திக் (63) ஆகஸ்ட் 8 ஆம் திகதி  மாரடைப்பால் காலமானார்.

கேரள மாநிலம் கொச்சியில் இருக்கும் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த சித்திக்கின் உடலுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில் நடிகர் சூர்யா கொச்சியில் இருக்கும் சித்திக்கின் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது.

முன்னதாக சித்திக்கின் மறைவு குறித்து சூர்யா சமூக வலைதளத்தில் கூறியதாவது,

என் இதயம் கனக்கிறது. சித்திக் சாரின் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். பல விதங்களில் ப்ரெண்ட்ஸ் எனக்கு முக்கியமான படம். ஒரு காட்சியில் சிறு முன்னேற்றம் காண்பித்தாலும் நடிகர்களை ஊக்குவிக்கும் மனிதர் சித்திக் சார் என உருக்கமாக தெரிவித்தார்.