Breaking News

சத்யராஜ்ஜின் தாய் காலமானார்...!

சத்யராஜ்ஜின் தாய் காலமானார்...!

கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான  நடிகர் சத்யராஜ்ஜின் அம்மா வயது முதிர்வு காரணமாக இன்று (11) காலமானார்.

சத்யராஜின் அம்மா நாதாம்பாளுக்கு வயது முதிர்வு காரணமாக சில பிரச்சினைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், கோயம்புத்தூரில் அவரது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் அவர் காலமானதாகக் கூறப்படுகிறது. அவருக்கு 94 வயது. சத்யராஜ்ஜுக்கு கல்பனா மொன்ராடியார், ரூபா சேனாதிபதி என இரு சகோதரிகள் உள்ளனர்.

படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்த சத்யராஜ், அம்மாவின் மறைவு குறித்து அறிந்ததும் உடனடியாக கோவைக்கு புறப்பட்டுவிட்டாராம். சத்யராஜ் கோவை சென்றதும் அவரது அம்மாவின் இறுதிச் சடங்கு நடைபெறும் என சொல்லப்படுகிறது. சத்யராஜ்ஜின் அம்மா உயிரிழந்த செய்தி அறிந்த திரையுலகினரும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.