Breaking News

நடிகர் பிரபு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி...!!

நடிகர் பிரபு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதி...!!

நடிகர் பிரபுவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் கடந்த திங்கட்கிழமை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் நடிகர் பிரபுவுக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து லேசர் வகையை சேர்ந்த அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகத்தில் இருந்த கல் அகற்றப்பட்டுள்ளது.

அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பொதுவான மருத்துவ சோதனைகளுக்கு பிறகு ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.