Breaking News

லீக் ஆகிய வாட்ஸ்அப் மெசேஜ்; NZ Herald நிருபரை ஒருமையில் திட்டிய ஆக்லாந்து மேயர் - நடந்தது என்ன...??

லீக் ஆகிய வாட்ஸ்அப் மெசேஜ்; NZ Herald நிருபரை ஒருமையில் திட்டிய ஆக்லாந்து மேயர் - நடந்தது என்ன...??

ஆக்லாந்து மேயர் வெய்ன் பிரவுனை New Zealand Herald தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பேசிய போது அவர் தேசிய அவசரகால மேலாண்மை அதிகாரிகளை விமர்சித்ததுடன் Herald நிருபரை ஒருமையில் திட்டியதாக New Zealand Herald செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக சனிக்கிழமை காலை நண்பர்களிடம் வாட்ஸ்அப் குழுவில் பேசிய பிரவுன் "எனவே டென்னிஸ் இல்லை" என்று கூறியுள்ளார்.

மேலும் சனிக்கிழமை இரவு, பிரவுன் வாட்ஸ்அப் குழுவில் "ஞாயிற்றுக்கிழமையும் தன்னால் டென்னிஸ் விளையாட முடியாது ஏனெனில் வெள்ளத்தில் மீடியாக்களை நான் சமாளிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

இந்த குறுஞ்செய்திகள் New Zealand Herald இற்கு கசிந்த நிலையில் இது குறித்து கருத்து கேட்கப்பட்ட பிறகு நிருபரை அவர் இவ்வாறு ஒருமையில் ('Don't f*** me over') திட்டியுள்ளார். 

கடந்த பல நாட்களாக ஆக்லாந்து மேயர் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

கிட்டத்தட்ட 20,000 பேர் அவர் பதவி விலகக் கோரி மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "நான் மூன்று ஆண்டுகளாக மேயராக இருக்கிறேன். அதைப் நீங்கள் எதுவும் செய்ய முடியாது" என்று அவர் Herald இடம் கூறியுள்ளார்.

நியூசிலாந்தில் வேறு யாரும் என்னைப்போல் 180,000 வாக்குகளைப் பெறப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமை ஆக்லாந்தில் ஏற்பட்ட வெள்ளத்தை அடுத்து அவசரகால நிலையை அறிவிப்பதில் தாமதமாக செயல்பட்டமை குறித்தும் அவர் குற்றம் சாட்டப்பட்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் முன்னாயத்தம் இல்லாத வெள்ளத்திற்கு பதிலளிக்கும் வகையில் தேவையான நெறிமுறைகளை தான் பின்பற்றுவதாக கூறினார்.

மேலும் வரவிருக்கும் வானிலைக்கு ஆக்லாந்து "தயாராக இல்லை" என்று பிரவுன் கூறினார்.

அவசரகால மேலாண்மை அதிகாரிகள் இது போன்ற ஒரு நிகழ்வுக்குத் தயாராக இருக்கத் தான் பல வருடங்களாக ஊதியம் பெற்றுள்ளனர். அவர்களால் என்னிடம் எதுவும் சொல்ல முடியவில்லை என்று தேசிய நிர்வாக அதிகாரிகளைப் பற்றியும் அவர் சாடினார்.