Breaking News

மற்றுமொரு மழை வெள்ளத்தில் மூழ்கிய ஆக்லாந்து...!!

மற்றுமொரு மழை வெள்ளத்தில் மூழ்கிய ஆக்லாந்து...!!

ஆக்லாந்து நேற்றைய தினம் இரவு மற்றொரு வெள்ளத்தை சந்தித்துள்ளது.

மழையுடன் பலத்த காற்றும் வீசியது என ஆக்லாந்து அவசரகால நிர்வாகம் கூறியது.

இந்நிலையில் பலத்த காற்றினால் சில வீடுகள் மீது மரங்கள் விழுந்தன.

Mount Roskill போன்ற புறநகர்ப் பகுதிகளில் வெள்ள நீர் அபாயகரமான உயரத்தை எட்டியது.

நகர் முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளின் சில பகுதிகள் தண்ணீரில் மூழ்கியதால், கடந்து செல்ல முடியாமல் சிறிது நேரம் மூடப்பட்டது.

நகரத்தின் வடக்கு, மத்திய மற்றும் மேற்குப் பகுதிகளிலிருந்து அவசர உதவிக்கான டஜன் கணக்கான அழைப்புகளுக்கு அவசர சேவைகள் பதிலளித்தன.