Breaking News

ஆக்லாந்தில் வீடு இடிந்து விழுந்ததில் மூவர் காயம்...!!

ஆக்லாந்தில் வீடு இடிந்து விழுந்ததில் மூவர் காயம்...!!

ஆக்லாந்தின் Manukau Heads இல் இன்று நண்பகலுக்குப் பிறகு நிலச்சரிவு காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் மூன்று பேர் காயமடைந்தனர்.

Orua Bay வீதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்திற்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் அவசர சேவைகள் விரைந்து வந்தன.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தீயணைப்பு மற்றும் அவசரநிலை NZ இன் ரான் டெவ்லின் கூறுகையில்...

Orua Bay வீதியில் குறித்த வீடு இடிந்து விழுந்தது.

இச்சம்பவத்தில் மூன்று பேரும் காயமடைந்தனர்.

மூவரும் இப்போது மீட்கப்பட்டுள்ளனர், அவர்களில் இருவர் சிகிச்சைக்காக மிடில்மோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

மீட்பு பணிக்கு சுமார் 40 நிமிடங்கள் எடுத்ததாக டெவ்லின் கூறினார்.