Breaking News

தலித் கோயிலுக்கு சென்றது தவறா? ஜாதி தீண்டாமை தொடருதே - கொந்தளித்த பா.ரஞ்சித்...!!

தலித் கோயிலுக்கு சென்றது தவறா? ஜாதி தீண்டாமை தொடருதே - கொந்தளித்த பா.ரஞ்சித்...!!

இந்தியா: தமிழ்நாடு

சேலம் திருமலைகிரி பகுதியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்கிற இளைஞர் உயர் சாதியினர் விதித்த தடையை மீறி அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்குள் நுழைந்ததற்காக அவரை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்த தி.மு.க ஒன்றிய செயலாளர் டி.மாணிக்கம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்
இதுகுறித்து இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டரில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது...

பெரியார், அண்ணா முன் வைத்த பிராமன & சாதி எதிர்ப்பில் அரசியல் மாற்றத்தை கண்ட தமிழ்நாடு, இன்னும் சமூக மாற்றத்தை கண்டடையாமல் இருக்க காரணம் என்ன?

உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மத, சாதி உணர்வுக்கு எதிரானவர்களா? மதமும் சாதியும் சமூகதளத்தில் வேறு வேறா? திமுக ஆட்சியில் தொடரும் சமூக அநீதி!!!

நீதி கட்சி தொடங்கி இன்று வரையிலான தமிழ்நாடு கட்சிகளின் அரசியல் என்பது, அரசியல் மற்றும் அதிகார மாற்றத்திற்கா? சமூக மாற்றத்திற்கா?

ஒரு பக்கம் பட்டியலின மக்களுக்கு கோயில் திறப்பு! ஒரு பக்கம் பட்டியலின இளைஞன் கோயில் நுழைவு பெரூம் குற்றம்! தொடரும் தீண்டாமை கொடுமைகள்?' என்று பதிவிட்டு உள்ளார்.

இதுகுறித்து பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..

மக்களின் முன்பு பட்டப்பகலில் பொதுவெளியில் தலித் இளைஞரை நிக்க வைத்து வன்கொடுமை செய்வது தான் திமுக அரசியல் பணியா? இவர்கள் தான் சமூகநீதி பயணத்தில் மக்களுக்கு துணை நிற்பவர்களா? புதுக்கோட்டை, திருவண்ணாமலை, சேலம் அனைத்திலும் கோவில் தீண்டாமை பிரச்சினை. இது தான் தமிழ்நாடு!#கொடுங்கோல்ஆட்சி என்று விமர்சித்துள்ளது.