Breaking News

‛டாட்டூ’வால் ரஷ்யாவை சாடிய இளம்பெண் - புதின் அரசின் பயங்கர தண்டனையை பாருங்க...!!

‛டாட்டூ’வால் ரஷ்யாவை சாடிய இளம்பெண் - புதின் அரசின் பயங்கர தண்டனையை பாருங்க...!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவிலும் சிலர் உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் ரஷ்யாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் பகுதியை 19 வயது ஒலேஸ்யா கிரிவ்ட்சோவா என்ற பெண் உக்ரைன் மீதான போர் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ஆர்க்காங்கெல்ஸ்கில் உள்ள வடக்கு பெடரல் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இவர் தனது சமூக வலைதள பதிவில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் தனது கணுக்காலில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிராக டாட்டூ ஒன்றை குத்தியுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமி அதிரடியாக கைது செய்யப்பட்டு தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்ய இராணுவத்தை இழிவுப்படுத்தியதாகவும், பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஒலேஸ்யா கிரிவ்ட்சோவா, நாட்டுக்கான அச்சுறுத்தலாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதாவது அந்த நாட்டின் சட்டப்பபடி பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ், தாலிபான்கள், அல்-கொய்தா உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்களை பயங்கரவாதிகளாக இணைக்கும் பட்டியலில் ஒலேஸ்யா கிரிவ்ட்சோவாவின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அவர் சிறையில் நீண்டகாலம் இருக்கும் நிலை ஏற்படும். இதுபற்றி அவரது தாயார் நடால்யா கிரிவ்ட்சோவா கூறுகையில் ‛‛ரஷ்யா அரசு போர் எதிர்ப்பு குரலை மௌனமாக்கும் முயற்சியில் செயல்படடு வருகிறது. எனது மகளின் கைது என்பது ஒரு பெரிய மிரட்டல்'' என சாடியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.