Breaking News

போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு போனஸ் பணத்தை அள்ளி வீசிய சீன நிறுவனம்..!!

போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு போனஸ் பணத்தை அள்ளி வீசிய சீன நிறுவனம்..!!

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 2002 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் ஹெனன் மைன் என்ற நிறுவனம் கிரேன் போன்ற கனரக வானங்கள் உற்பத்தியில் கொடி கட்டி பறக்கிறது.

இந்த நிறுவனத்தில் சுமார் 5,100 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நிறுவனத்தின் ஆண்டு விற்பனை வருவாய் மட்டும் 9.16 பில்லியன் யுவான் (1.1 பில்லியன் டாலர்)ஆக உள்ளது.

கொரோனா பரவலுக்கு மத்தியிலும் கடந்த ஆண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் வருவாய் 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் சீனாவின் பொருளாதாரம் சற்று ஆட்டம் கண்ட போதிலும் நிறுவனத்தின் வருவாய் உயர்ந்ததால் ஹெனன் மைன் நிறுவனம் மகிழ்ச்சியில் திளைத்துள்ளது.

இதனால், ஊழியர்களை நன்கு கவனிக்க வேண்டும் என முடிவு செய்த இந்த நிறுவனம் ஊழியர்களை பணத்தை வாரி இறைத்துள்ளது.

இதற்காக நிறுவன வளாகத்தில் கடந்த 17 ஆம் திகதி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ஹெனன் மைன் நிறுவனம் நிகழ்ச்சி மேடையிலேயே பணத்தை மலை போல குவித்து வைத்தது.

சுமார் 2 மீட்டர் உயரத்திற்கு பணக்கட்டுக்களாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தை பார்த்த ஊழியர்கள் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்துள்ளனர்.

சிறப்பாக பணியாற்றிய மூன்று சேல்ஸ் மேனஜர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6 கோடி ரூபாயை பரிசுத்தொகையாக கொடுத்துள்ளது அந்நிறுவனம்.

மேலும் சிறந்த ஊழியர்களாக தேர்வு செய்யப்பட்ட சுமார் 40 பேருக்கு ஒரு மில்லியன் யுவானிற்கு மேலாக போனசாக வழங்கப்பட்டது.

அதுபோக பணத்தை எண்ணும் போட்டியையும் ஊழியர்களுக்கு வைத்து இருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் அதிக தாள்களை எண்ணியவர்களுக்கு தனியாக ஒரு பரிசும் கொடுத்துள்ளது.

இதற்காக மட்டும் 12 மில்லியன் யுவான் தொகை ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்த போனஸ் தொகை போக ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் 30 சதவீத சம்பள உயர்வையும் அளித்து பணமழையில் குளிக்க வைத்துள்ளது.

இந்த விழாவில் திரும்பிய பக்கம் எல்லாம் பணம் தான் உள்ளது என்று சொல்லும் அளவுக்கு ஊழியர்களுக்கு பணம் வாரி இறைக்கப்பட்டுள்ளது.