Breaking News

புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள் மீள் பரிசீலனை குறித்த அறிவிப்பு

புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள்  மீள் பரிசீலனை குறித்த அறிவிப்பு

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 334,805 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில்,பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை 329,668 என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வருடம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் உதவித்தொகை வழங்கப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 20,000 ஆகும். இதில் 250 புலமைப்பரிசில்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தனது மதிப்பெண்களை மீள் பரிசீலனை செய்ய விரும்பினால், பிப்ரவரி 28 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்யலாம் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை புலமைப்பரிசில் பரீட்சையின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இம்முறை பெறுபேறுகள் வெளியாகும் போது மாவட்டம் மற்றும் நாடளாவிய தரவரிசைகள் வெளியிடப்படாது என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.