Breaking News

மத்திய ஆக்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்‌ - ஒருவர் படுகாயம்...!

மத்திய ஆக்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்‌ - ஒருவர் படுகாயம்...!

மத்திய ஆக்லாந்தில் இன்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

Remuera வில் உள்ள‌ Orakei சாலையில் மதியம் 1.10 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும், ஒரு நபர் மாலை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டதாகவும், விசாரணைகளுக்கு அவர் உதவுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.