Breaking News

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஓபிஎஸ் முக்கிய ஆலோசணை...!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஓபிஎஸ் முக்கிய ஆலோசணை...!!

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணமடைந்த நிலையில் 
பெப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என நேற்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த தேர்தல் என்பது அதிமுகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனியாக செயல்பட்டு வருவது தான் இதற்கு காரணமாகும்.

இந்நிலையில் தான் ஜனவரி 23‌ ஆம் திகதி ஓ பன்னீர் செல்வம் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.

இதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும், எடப்பாடி பழனிச்சாமியின் நகர்வின் அடிப்படையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதா வேண்டாமா என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு உள்ள நிலையில் இந்த ஆலோசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.