Breaking News

"விமான போக்குவரத்து துறை அமைச்சர்னு நெனப்பு" - காயத்ரியை விமர்சித்த திருச்சி சூர்யா...!!

"விமான போக்குவரத்து துறை அமைச்சர்னு நெனப்பு" - காயத்ரியை விமர்சித்த திருச்சி சூர்யா...!!

தமிழ்நாட்டில் பாஜக கட்சியில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தவர் காயத்ரி ரகுராம்.

இவர் தமிழ்நாடு பாஜக கட்சி தலைவர் அண்ணாமலையின் வார்ரூமிலிருந்து தன்மீது மோசமான கருத்துகளை முன் வைப்பதாக தினந்தோறும் டிவிட்டரில் புகார் கூறி வந்தார்.

இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேலும் பாஜகவில் அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற கருத்தையும் முன் வைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 10ஆம் திகதி சென்னையிலிருந்து இண்டிகோ 6இ- 7339 விமானம் புறப்படத் தயாராக இருந்த போது அந்த விமானத்தின் அவசரவழிக் கதவை பயணி ஒருவர் திறந்ததாக செய்திகள் வெளியாகின.

இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து விமானத்தின் கதவை திறந்தவர் கர்நாடகா பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா என தகவல்கள் வெளியாகின.

இந்த சம்பவம் தொடர்பில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் மன அழுத்தம் உள்ளவர்கள், பயங்கரவாதிகள்தான் பயணிகளின் உயிரை பணயம் வைத்து ஓடும் விமானத்தின் கதவை திறப்பார்கள் என கூறி விமர்சனம் செய்திருந்தார்.

இவரது இந்த ட்வீட்டிற்கு திருச்சி சூர்யா சிவா பதில் அளித்துள்ளார்.

அப்போது அவர் கூறுகையில் கதவுன்னாலே உங்களுக்கு ஏம்மா பிரச்சினையா இருக்குது. கண்ணாடி கதவு போட்டாலும் பிரச்சினை கதவை திறந்தாலும் பிரச்சினை. ஏதோ நீங்கள் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் என நினைப்பு என்று சூர்யா சிவா விமர்சித்துள்ளார்.

'குஷ்பு அல்லது காயத்ரி தன்னை வந்து சந்திக்கக் கூடும் என்பதால்தான் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதால் கண்ணாடி கதவை அமைத்தேன்' என அண்ணாமலை ஒரு ஆடியோவில் கூறியிருந்ததை காயத்ரி ரகுராம் தனது பேட்டியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

இதைத்தான் கதவுன்னாலே பிரச்சினை என திருச்சி சூர்யா விமர்சித்துள்ளார்.