Breaking News

நார்த்லேண்ட் - Paparoa வில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி...!!

நார்த்லேண்ட் - Paparoa வில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி...!!

நார்த்லேண்டின் Paparoa என்ற இடத்தில் உள்ள மாநில நெடுஞ்சாலை 12 இல் இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மதியம் 1.58 மணியளவில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர விபத்து பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

மாநில நெடுஞ்சாலை 12 மூடப்பட்டது. Franklin சாலை மற்றும் Stirling சாலையில் மாற்றுப்பாதைகள் உள்ளன.

இந்த வழித்தடங்கள் கனரக சரக்கு வாகனங்களுக்கு ஏற்றதாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

வாகன சாரதிகள் முடிந்தவரை அப்பகுதியில் பயணத்தைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.