Breaking News

கோதுமைக்காக சாக்கடையில் உருண்டு சண்டை போடும் பாகிஸ்தான் மக்கள் - பதற வைக்கும் காணொளி...!!

கோதுமைக்காக சாக்கடையில் உருண்டு சண்டை போடும் பாகிஸ்தான் மக்கள் - பதற வைக்கும் காணொளி...!!

பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம் தனது கோர முகத்தை காட்ட தொடங்கி உள்ளது.

பாகிஸ்தானில் அடுத்த ஒரு மாதத்திற்குள் உணவு தானியங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்கு உணவுப்பஞ்சம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் தற்போதைய அந்நிய செலாவணி கையிருப்பின் மூலம் 2 வாரங்கள் மட்டுமே அந்நாட்டால் உணவு தானியங்களையும் கச்சா எண்ணெய்யையும் இறக்குமதி செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது.

இதனால் வெகுசீக்கிரத்தில் பாகிஸ்தான் திவாலாகிவிடும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் மக்களின் முக்கிய உணவான கோதுமைக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் கடுமையான உணவுப்பஞ்சத்தை நோக்கி நகர்ந்து வருவதை உணர்த்தும் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அங்குள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள நகரில் அரங்கேறிய சம்பவங்கள்தான் இவை.

அந்த வீடியோவில் கோதுமையை வாங்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். பின்னர் கடைகளில் கோதுமை தீர்ந்து போவது தெரிந்ததால், மக்கள் முண்டியடித்துக் கொண்டு கோதுமை மூட்டைகளை வாங்க முயற்சிக்கிறார்கள்.

அப்போது அவர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்படுகிறது. ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொள்ளும் அவர்கள் பின்னர் கோதுமை மூட்டைகளை எடுத்துக்கொண்டு ஓடுகிறார்கள்.

மற்றொரு பகுதியில் கோதுமை மூட்டைகள் வாங்கும் போது ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சாக்கடையில் புரண்டு சண்டையிடுகிறார்கள்.

இந்த வீடியோக்கள் இணையத்தில் பரவி காண்பவர்களின் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது.