Breaking News

திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 செம்மறி ஆடுகள் Ashburton இல் வாகனத்தில் இருந்து மீட்பு...!!

திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 செம்மறி ஆடுகள் Ashburton இல் வாகனத்தில் இருந்து மீட்பு...!!

திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து செம்மறி ஆடுகள் Ashburton இல் உள்ள புறநகரில் ஒரு வாகனத்தில் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

இந்நிலையில் செம்மறி ஆடுகளின் காதுகளில் உள்ள அடையாளங்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார் அவற்றை அடையாளம் கண்டு, அவற்றின் உரிமையாளரிடம் திருப்பித் தர உதவ முடியுமா என முயற்சி செய்து வருகின்றனர்.

இன்று அதிகாலை 4 மணியளவில் Cochranes சாலை மற்றும் Elgin சாலையின் ஓரத்தில் இருந்த வாகனத்தில் குறித்த செம்மறி ஆடுகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் எந்த செம்மறி ஆடும் காணாமல் போனதாக புகார் செய்யப்படவில்லை, ஆனால் விவசாயிகள் தங்கள் செம்மறி ஆடுகளின் எண்ணிக்கையை சரிபார்த்து, ஏதேனும் காணாமல் போயிருந்தால் புகாரளிக்குமாறு பொலிஸார் வலியுறுத்துகின்றனர்.

அவை தெற்கு Canterbury பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் பொலிஸ் அதிகாரிகள் கூறினர்.