Breaking News

ஆக்லாந்து; Parnell இல் உள்ள லாட்ஜில் முதியவர் ஒருவர் தீடீர் மரணம் - பொலிஸார் விசாரணை...!!

ஆக்லாந்து; Parnell இல் உள்ள லாட்ஜில் முதியவர் ஒருவர் தீடீர் மரணம் - பொலிஸார் விசாரணை...!!

மத்திய ஆக்லாந்தின் புறநகர் பகுதியான Parnell என்ற இடத்தில் உள்ள பேக் பேக்கர்ஸ் லாட்ஜில் முதியவர் ஒருவர் தீடீர் மரணமடைந்துள்ளார்.

நேற்றிரவு Parnell இல் St Georges Bay வீதியில் உள்ள குறித்த லாட்ஜில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Lantana Lodge Backpackers நிறுவனத்தின் மேலாளர் கூறுகையில், நேற்றிரவு 70 வயது மதிக்கத்தக்க குறித்த முதியவர் தீடீரென சரிந்து விழுந்தார்.

அவர் ஒரு கனிவான ஆத்மா, நீண்ட காலமாக இங்கு வாழ்ந்த ஸ்காட்டிஷ் மனிதர் என தெரிவித்தார்.

ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இரவு 11 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்றதை செயின்ட் ஜான்ஸ் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினர்.

ஆனால் அந்த நபரை உயிர்ப்பிக்க முடியவில்லை.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று இன்று காலை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்