Breaking News

சான்ஸே இல்ல;பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரவே முடியாது - தாலிபான்கள்...!!

சான்ஸே இல்ல;பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரவே முடியாது - தாலிபான்கள்...!!

தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.

ஒன்றரை வருட காலமாக தாலிபான்கள் ஆப்கன் பெண்களுக்கு எதிரான அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில் இதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாது என்று பெண்கள் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

மாணவிகளுக்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மாணவர்களின் இந்தப் போராட்டத்தால் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களை மூடும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில் பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படமாட்டாது என்று தாலிபான்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...

பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை இரத்து செய்வது குழுவிற்கு முன்னுரிமை இல்லை.

இஸ்லாமிய சட்டத்தை மீறும் எந்தவொரு செயலையும் அனுமதிக்க மாட்டோம்.

மேலும் பெண்கள் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் குறித்த கவலைகள் நாட்டில் நிறுவப்பட்ட குழுவின் விதிகளின்படி கையாளப்படும்.

இஸ்லாமிய எமிரேட் அனைத்து விஷயங்களையும் இஸ்லாமிய ஷரியாவின்படி ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறது. மேலும் நாட்டில் ஷரியாவுக்கு எதிராக செயல்படுவதை ஆளும் அரசாங்கம் அனுமதிக்க முடியாது.

ஆப்கானிஸ்தானில் உள்ள மதக்கோரிக்கைகளைப் புரிந்து கொள்ளவும், மனிதாபிமான உதவிகளை அரசியலுடன் பிணைப்பதை தவிர்க்கவும் ஆப்கானிஸ்தானின் நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச உதவி அமைப்புகள் புரிந்து கொள்ள வேண்டும்‌ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையானது ஆப்கன் பெண்களுக்கு மேலும் கலக்கத்தை தந்துள்ளது.