Breaking News

வெலிங்டனில் வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்திய 51 சாரதிகளை தடுத்து நிறுத்திய பொலிஸார்...!!

வெலிங்டனில் வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்திய 51 சாரதிகளை தடுத்து நிறுத்திய பொலிஸார்...!!

வெலிங்டனில் உள்ள Arras Tunnel அருகே நேற்று இரண்டு மணி நேர இடைவெளியில் 51 வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது செல்போன் பயன்படுத்தியதற்காக பொலிஸாரால் நிறுத்தப்பட்டனர்.

வெலிங்டன் acting road policing மேலாளர் மூத்த சார்ஜென்ட் மாட் ஃபிட்ஸ்ஜெரால்ட் கூறுகையில்...

இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான வாகன சாரதிகள் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்தி கவனத்தை சிதறடித்து வாகனம் ஓட்டுவது ஏமாற்றமளிக்கிறது.

தொலைபேசியை ஒதுக்கி வையுங்கள் அல்லது நீங்கள் அதைப் பயன்படுத்த வேண்டும் என்றால் வாகனத்தை நிறுத்துங்கள்" என்று ஃபிட்ஸ்ஜெரால்ட் கூறினார்.

இந்நிலையில் போன் பயன்படுத்தி குற்றத்திற்காக தடுத்து நிறுத்தப்பட்ட சாரதிகளுக்கு விதிமீறல் நோட்டீஸ் வழங்கியதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இது அடிக்கடி கடுமையான விபத்துக்கள் ஏற்படுவதற்கு ஒரு காரணியாகும்.

இவர்களில் ஐந்து சாரதிகள்/அல்லது பயணிகள் சீட் பெல்ட் அணியாமல் இருப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

இது விபத்து ஏற்பட்டால் காயம் அல்லது இறப்புக்கு வழிவகுக்கும் அல்லது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது.

வாகன சாரதிகள் சாலையில் கவனம் செலுத்தி, சீட் பெல்ட்களை அணிந்துகொண்டு, அவர்களும் மற்றவர்களும் பாதுகாப்பாக தங்கள் இலக்கை அடைவதை உறுதிசெய்யுமாறு பொலிஸார் கேட்டுக்கொள்கிறார்கள்.