Breaking News

வரலாறு காணாத உணவுப் பஞ்சம்; கோதுமை லாரியை விரட்டிச் செல்லும் மக்கள் - பாகிஸ்தானில் பரிதாபம்...!!

வரலாறு காணாத உணவுப் பஞ்சம்; கோதுமை லாரியை விரட்டிச் செல்லும் மக்கள் - பாகிஸ்தானில் பரிதாபம்...!!

பாகிஸ்தானில் வரலாறு காணாத உணவுப் பஞ்சம் நிலவி வருவதை ஒட்டி, அந்நாட்டில் உள்ள மக்களின் நிலைமை பரிதாபகரமாக மாறி வருகிறது.

உணவுப் பொருட்களுக்காகவும், சப்பாத்தி துண்டுகளுக்காகவும் மனிதர்கள் பயங்கரமாக மோதிக்கொள்ளும் கோரக்காட்சிகள் பாகிஸ்தானில் அரங்கேறி வருகின்றன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோதுமை வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் ஒரு நகரில் கோதுமை மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை நூற்றுக்கணக்கான மக்கள் மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மக்கள் கூட்டம் துரத்துவதால் என்ன செய்வதென அறியாத ஊழியர்கள், மக்களிடம் இருக்கும் சொற்ப பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு கோதுமை மூட்டைகளை கொடுப்பதை பார்க்க முடிகிறது.