Breaking News

ஹமில்டனில் பொலிஸாரால் தேடப்பட்ட வாகனம் வேலியில் மோதி விபத்து...!!

ஹமில்டனில் பொலிஸாரால் தேடப்பட்ட வாகனம் வேலியில் மோதி விபத்து...!!

இன்று காலை ஹமில்டனில் பொலிஸாரால் தேடப்பட்ட வாகனம் வேலியில் மோதி தீப்பிடித்தது.

நகரின் மேற்கில் உள்ள Forest Lake பகுதியில் காலை 11 மணிக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து வந்தனர்.

குறித்த இடத்தில் ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்திய போது அந்த வாகனம் நிறுத்தாது சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அந்த வாகனம் ஒரு பொலீஸ் காரை மோதிவிட்டு தப்பிச் சென்றது.

அதைத் தொடர்ந்து பொலிஸார் அந்த வாகனத்தை தேடும் பணிகளை தொடங்கினர்.

இந்நிலையில் குறித்த வாகனம் Claudelands என்ற இடத்தின் கிழக்கு புறநகரில் உள்ள Brooklyn சாலையில் ஒரு வேலியில் மோதி தீ பிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த இடத்தில் சாலை மூடப்பட்டதால், அப்பகுதியை தவிர்க்குமாறு வாகன சாரதிகளை பொலிஸார் வலியுறுத்தினர்.

மேலும் வாகனத்தில் இருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.