Breaking News

ஜனக் படேலின் மரணத்திற்கு நீதி கோரி பிரதமர் ஆர்டெர்னின் வாக்காளர் அலுவலகத்திற்கு வெளியே ஒன்று கூடிய மக்கள்...!

ஜனக் படேலின் மரணத்திற்கு நீதி கோரி பிரதமர் ஆர்டெர்னின் வாக்காளர் அலுவலகத்திற்கு வெளியே ஒன்று கூடிய மக்கள்...!

கடந்த புதன்கிழமை இரவு ஆக்லாந்தின் Sandringham இல் இடம்பெற்ற Dairy Shop கொள்ளை சம்பவத்தில் ஜனக் படேல் என்ற இந்தியர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, நியூசிலாந்தைச் சுற்றியுள்ள Dairy Shop கள் அனைத்தும் இன்று மதியம் பல மணி நேரம் மூடப்பட்டு நாடு தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் அமைப்பாளர் சன்னி கௌஷல் கூறுகையில், "தங்கள் சமூகத்திற்கு சேவை செய்யும் Dairy Shop மற்றும் சில்லறை வணிக கொள்ளை சம்பவத்தில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது" என்றார்.

இந்நிலையில் ஆக்லாந்தின் Mt Albert இல் உள்ள பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் வாக்காளர் அலுவலகத்திற்கு வெளியே சுமார் 300 பேர் கூடி "எங்களுக்கு நீதி வேண்டும்" என்று கோஷமிட்டனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால், நிலைமையை கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

ஜனக் படேலின் கொலைக்கு எதிராகவும், திருட்டுகள் மற்றும் சமூகத்தில் நடக்கும் அனைத்து வன்முறைக் குற்றங்கள், குறிப்பாக சில்லறை வணிகங்களை நோக்கமாகக் கொண்ட குற்றவாளிகள் மீது உறுதியான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நியூசிலாந்து இந்திய மத்திய சங்கத் தலைவர் Narendra Bhana, ஆக்லாந்து இந்தியன் அசோசியேஷன் தலைவர் தன்சுக் லால் மற்றும் பால் பண்ணை மற்றும் வணிக உரிமையாளர்கள் குழுமத் தலைவர் சன்னி கௌஷல் போன்ற சமூகத் தலைவர்கள் இந்தப் போராட்டத்தின் முன்னணியில் உள்ளனர்.