Breaking News

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக நின்ற 2500 பேர் - எதற்காக..??

அவுஸ்திரேலிய கடற்கரையில் நிர்வாணமாக நின்ற 2500 பேர் - எதற்காக..??

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள கடற்கரை சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் செல்லும் கடற்கரையாக அது உள்ளது.

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான இந்த கடற்கரையில் திடீரென ஒரே நேரத்தில் 2500 பேர் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நின்றுள்ளனர்

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

எதற்காக இவர்கள் இப்படி நிர்வாணமாக நின்றார்கள் என்பதை பார்ப்போம்.

உலக அளவில் தோல் புற்றுநோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அவுஸ்திரேலியா உள்ளது. 

அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் கூறுகிறது.

இந்தநிலையில் அவுஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக தோல் புற்றுநோய் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய மக்கள் வழக்கமான தோல் பரிசோதனைகளை செய்து கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அந்த நாட்டின் சிட்னி நகரில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று காலை வழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில் ஆண்கள், பெண்கள் என சுமார் 2,500 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

அவர்கள் சூரிய உதயத்தின்போது கடற்கரை முன்பு நிர்வாணமாக நின்று தோலின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.