Breaking News

"நீல நிறத்தில் மாறிய கைகள்" - ரஷ்ய அதிபருக்கு என்ன ஆச்சு? - உற்று நோக்கும் உலக நாடுகள்...!!

"நீல நிறத்தில் மாறிய கைகள்" - ரஷ்ய அதிபருக்கு என்ன ஆச்சு? - உற்று நோக்கும் உலக நாடுகள்...!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து சில காலமாக வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி தருவதாக உள்ளது. இந்தச் சூழலில் ரஷ்ய அதிபர் புடின், கியூபா அதிபர் மிகுவல் டயஸ்-கனெல் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

இதில் தங்களின் பொது எதிரி அமெரிக்காவுக்கு எதிராக அணியை உருவாக்குவது குறித்து ஆலோசித்தனர்.

இந்நிலையில் இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது.

அதில் ரஷ்ய அதிபர் புடினின் கைகள் மர்மமான முறையில் நீல நிறத்தில் இருந்துள்ளது.

இது புடினின் உடல்நிலை குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பி உள்ளது.

இந்நிலையில் இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது புடின் தனது சேரை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு இருந்தார் என்று பிரிட்டன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அவர் தனது கால்களை 
அசௌகரியமாக நகர்த்துவதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த சந்திப்பு முழுவதுமே புதின் நடுக்கத்துடன் அசௌகரியமாக காணமுடிந்ததாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மாதம் தொடக்கத்தில் பொது நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புடினின் படங்களில் அவரது கைகளில் வித்தியாசமாக இருந்தது. அவரது கைகளில் ஊசி குற்றப்பட்டதற்கான தழும்புகள் கருப்பு நிறத்தில் இருந்தது.

இதுவும் கூட இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

பலரும் அது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையின் போது, நேரடியாக நரம்பிற்கு மருந்துகளை (IV) அளிக்கும் முறையால் ஏற்பட்ட டிராக் மார்க் என்று கூறினர்.

இது தொடர்பாக ஓய்வுபெற்ற பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ரிச்சர்ட் டானட் கூறுகையில், 'உடலின் மற்ற பாகங்களில் ஊசி போட முடியாத நிலையில், அவரது கைகளில் கறுப்பு நிற மார்க்குகள் கண்டறியப்பட்டு உள்ளது. இது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதையே காட்டுகிறது' என்றார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரஷ்ய அதிபர் புதின் குறித்த அமெரிக்க உளவுத்துறையின் ரிப்போர்ட் ஊடகங்களில் கசிந்தது. அதில் புதினுக்கு கேன்சர் மோசமான நிலையில் இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.