Breaking News

2 அங்குல வாலுடன் பிறந்த அதிசய குழந்தை - மெக்சிகோவில் சம்பவம்...!!

2 அங்குல வாலுடன் பிறந்த அதிசய குழந்தை - மெக்சிகோவில் சம்பவம்...!!

மெக்சிகோ நாட்டின் வடகிழக்கில் ஊரக பகுதியில் அமைந்த மருத்துவமனையில் கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் 

குறித்த கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடந்து உள்ளது.

இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்து உள்ளது. பிறந்த குழந்தையின் பின்புறத்தில் 2 அங்குல நீளத்தில் வால் ஒன்று காணப்பட்டுள்ளது.

உருளை வடிவில் காணப்படும் அந்த வாலானது, தோல் மற்றும் முடி கொண்டு மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.

இதன்பின்னர் அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நீக்கி உள்ளனர்.

இதன்பின்பு, குழந்தை நலமுடன் உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் மருத்துவ உலகில் ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது.