Breaking News

"எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுகிறீர்கள்" - வடகொரிய அதிபரின் சகோதரி ஆவேசம்...!!

"எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுகிறீர்கள்" -  வடகொரிய அதிபரின் சகோதரி ஆவேசம்...!!

வட கொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீராப்பகை உள்ளது. 

இந்நிலையில் அமெரிக்காவும், தென்கொரியாவும் ஆண்டுதோறும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுவது வடகொரியாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தொடர்ந்து ஏவி சோதித்து வருகிறது.

இந்நிலையில் வடகொரியா மீது ஒருதலைப்பட்சமான பொருளாதாரத்தடைகளை விதிக்க பரிசீலிப்பதாக தென்கொரியா அறிவித்தது.

இதனையடுத்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங், தென் கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கிற வகையில் ஒரு ஆவேச அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 அதில் அவர்கூறி இருப்பதாவது...

அமெரிக்கா கொடுத்த எலும்பைக் கடித்துக்கொண்டு ஓடும் காட்டு நாயை விட மோசமான தென் கொரியா, வட கொரியா மீது என்ன தடைகளை விதிக்கப்போகிறது என்று ஆச்சரியப்படுகிறேன்.

என்ன, ஒரு அற்புதமான காட்சி. எங்கள் மீதான அமெரிக்கா மற்றும் அதன் தென்கொரிய கூலிகளின் அவநம்பிக்கையான தடைகள் மற்றும் நிர்ப்பந்தங்கள், தென்கொரியா மீதான விரோதத்துக்கும், கோபத்துக்கும் எண்ணெய் ஊற்றுவது போலாகும். மேலும் அது அவர்களுக்கு ஒரு கயிறாக இருக்கும் என்று முட்டாள்தனமான முட்டாள்களை எச்சரிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வட கொரியாவின், அணு ஆயுதத்திட்டம் மற்றும் ஏவுகணை திட்டங்களுக்கு நிதி வழங்கும் சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்புள்ளதாகக் கருதி, அந்த நாட்டைச் சேர்ந்த 15 தனி நபர்கள் மீதும், 16 அமைப்புகள் மீதும் தென்கொரியா சமீபத்தில் பொருளாதாரத் தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.