Breaking News

"டீ சர்ட்டை கழற்றுங்க"‌.. - உலககோப்பை கால்பந்து போட்டியில் நிருபருக்கு நேர்ந்த கதி..!!

"டீ சர்ட்டை கழற்றுங்க"‌.. - உலககோப்பை கால்பந்து போட்டியில் நிருபருக்கு நேர்ந்த கதி..!!

ஓரினச்சேர்க்கை விவகாரத்தில் கத்தாரில் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு சென்ற அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகை நிருபர் ஒருவரை தடுத்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரது டீசர்ட்டை கழற்ற கூறிய சம்பவம் நடந்துள்ளது.

கத்தாரில் கால்பந்து போட்டி தொடர்பான செய்திகள் பரபரப்பாக வெளியாகி வரும் நிலையில் தான் அதுதொடர்பான சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் கத்தாரில் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் உடலுறவு வைத்து கொள்ளவும், LGBTஎனும் தன்பால் ஈர்ப்பாளர்களுக்கும் (ஓரினச்சேர்க்கையாளர்) அனுமதி இல்லை என கூறப்பட்டுள்ளது.

LGBT என்பது Lesbian, Gay, Bisexual and Transgender ஆகியவற்றை குறிக்கும்.

இந்நிலையில் கத்தார் உலககோப்பை போட்டியில் LGBT தடைக்கு பல நாடுகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கிடையே தான் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அதாவது இங்கிலாந்து - ஈரான் அணிகள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அதன்பிறகு அமெரிக்கா-வேல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டி கத்தார் அல் ரய்யானில் உள்ள அகமது பின் அலி ஸ்டேடியத்தில் நடந்தது.

போட்டியை காண ரசிகர்கள், பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் சிபிஎஸ் ஸ்போர்ட்ஸ் எனும் பத்திரிகையில் பணியாற்றும் நிருபர் கிரண்ட் வாலை  பாதுகாப்பு அதிகாரிகள்  நிறுத்தினர்.

இதற்கு அவரது டீசர்ட்டில் இடம்பெற்றிருந்த வானவில் போன்ற தோற்றம் தான் காரணமாகும்.

வானவில்லில் 7 நிறங்கள் உள்ள நிலையில் அதேபோல் LGQTக்கு சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம். ஊதா வண்ணங்கள் கொண்ட கொடி உள்ளது.

இந்நிலையில் கிரண்ட் வால் ஓரினச்சேர்க்கையாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக அவரை நிறுத்தியுள்ளனர்.

இதையடுத்து 25 நிமிடங்கள் கழித்து பாதுகாப்பு அதிகாரிகள் அவரை விடுத்தனர். இதுபற்றி கிராண்ட் வால் கூறுகையில், ‛‛மைதானத்துக்கு நுழைய எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் டீசர்ட்டை கழற்றி மாற்ற வேண்டும் என கூறினார். செல்போனை பறித்தனர். அதன்பிறகு பாதுகாப்பு பிரிவை சேர்ந்த தலைவர் வந்து மன்னிப்பு கோரி என்னை விடுவித்து மைதானத்துக்குள் அனுமதித்தார்'' என கூறியுள்ளார்.

தற்போது இந்த சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.