Breaking News

Dairy Shop இல் இடம்பெற்ற கொள்ளை‌ சம்பவத்தில் நபர் ஒருவர் மரணம் - நீதி கோரி ஒன்று கூடிய Sandringham குடியிருப்பாளர்கள்...!!

Dairy Shop இல் இடம்பெற்ற கொள்ளை‌ சம்பவத்தில் நபர் ஒருவர் மரணம் - நீதி கோரி ஒன்று கூடிய Sandringham குடியிருப்பாளர்கள்...!!

ஆக்லாந்தில் Sandringham பகுதியில் உள்ள ஒரு Dairy Shop இல் இடம்பெற்ற கொள்ளை‌ சம்பவத்தின் போது ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இரவு 8.05 மணியளவில் Haverstock சாலை மற்றும் Fowlds Avenue சந்திப்பில் உள்ள Dairy Shop இல் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததை அடுத்து பொலிஸார் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஒரு குற்றவாளி கத்தியுடன் கடைக்குள் நுழைந்து ஊழியரை கத்தியால் குத்திவிட்டு Cash register ஐ எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்த தாங்கள் இன்னும் பணியாற்றி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடையின் உரிமையாளர் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் கடையை பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சுமார் 100 Sandringham குடியிருப்பாளர்கள் குறித்த Dairy Shop இற்கு அருகில் பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கு நீதி கோரி ஒன்று கூடினர்.

Sandringham Neighbourhood Support ஒருங்கிணைப்பாளர் John McCaffery, கூடுதல் பாதுகாப்பைப் பெற சூப்பரெட் கடை உரிமையாளர் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் ஆனால் காவல்துறை அதை நிராகரித்ததாகவும் தெரிவித்தார்.

"இந்த Dairy Shop இற்கு 15 வருட வன்முறை மற்றும் திருட்டு வரலாறு உண்டு, அதை நாங்கள் காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளோம்."

ஆனால் அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

McCaffery இந்த கொடிய தாக்குதலால் மிகவும் வருத்தப்பட்டார்.  "இது ஒரு சோகம்", என்றார்.

கடையின் உரிமையாளரும் அவரது குடும்பத்தினரும் சமூகத்தின் மதிப்புமிக்க உறுப்பினர்களாக இருந்தனர். 

அவர் Neighbourhood Support குழுவின் உறுப்பினர், அவர் எங்கள் சமூக செயல்பாடுகளுக்கு உணவு மற்றும் பொருட்களை நன்கொடையாக வழங்குகிறார், மேலும் அவர் தங்கள் குடும்பத்தை போல சமூகத்தால் நன்கு நேசிக்கப்பட்டவர் என அவர் தெரிவித்தார்.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தனது சமூக பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் பிரதமர் ஆர்டெர்ன்‌..

பொலிஸாரிடம் இருந்து புதுப்பிப்புகளைத் தொடர்ந்து பெறுவதாகவும், ஏதேனும் புதிய தகவலைப் பெறும் பட்சத்தில் அதை பகிர்ந்து கொள்வதாகவும் கூறினார்.

"தங்கள் அன்புக்குரியவரை இழந்து இன்று துக்கத்தில் இருக்கும் குடும்பத்திற்கு - இது நடந்ததற்காக நான் மிகவும் வருந்துகிறேன், ”என்று அவர் தெரிவித்துள்ளார்.