Breaking News

மேற்கு ஆக்லாந்தில் ஒரு பயங்கர விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற நபரை தேடும் பொலிஸார்...!!

மேற்கு ஆக்லாந்தில் ஒரு பயங்கர விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்ற நபரை தேடும் பொலிஸார்...!!

இன்று பிற்பகல் மேற்கு ஆக்லாந்தில் ஒரு பயங்கரமான விபத்தை ஏற்படுத்திய நபரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Glen Eden இல் Glendale சாலையில் உள்ள கார் பார்க்கிங்கில் இடம்பெற்ற குறித்த சம்பவத்திற்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் டிம் வில்லியம்ஸ் கூறுகையில்..

மதியம் 12.15 மணியளவில் வாகனம் மோதியதில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

ஒரு நூலகம் மற்றும் சில்லறை கடைக்கு அடுத்துள்ள கார்பார்க்கிங் பெரிய சுற்றி வளைப்பால் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆயுதம் தாங்கிய போலீசார் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் சம்பவ இடத்தில் இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் விபத்துடன் தொடர்புடைய வாகனத்தை கண்டுபிடிக்க பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக வில்லியம்ஸ் கூறினார்.

விசாரணைகள் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளன என்று வில்லியம்ஸ் கூறினார்.

இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த எவரும் 105 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு வில்லியம்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.