Breaking News

New Plymouth இல் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி - ஆக்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் படுகாயம்..!!

New Plymouth இல் இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி - ஆக்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் படுகாயம்..!!

இன்று காலை New Plymouth இல் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

மேலும் ஆக்லாந்தில், Waterview Tunnel அருகே இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இதன்படி இன்று அதிகாலை 1.30 மணியளவில் New Plymouth இல் உள்ள Motunui பிரதான வடக்கு வீதியில் இரண்டு வாகனங்களுக்கு இடையில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்த 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஆக்லாந்தின் Waterview சுரங்கப்பாதையில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்றிரவு 11.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.