Breaking News

'வாரிசு' திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!!

'வாரிசு' திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்..!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வெளிவர உள்ள 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் 'வாரிசு' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இதனை புதிய'வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.