Breaking News

நிலவும் சீரற்ற வானிலை - ஹமில்டன் அருகே வாகனங்கள் மீது வீழ்ந்த மரங்கள்...!!

நிலவும் சீரற்ற வானிலை -  ஹமில்டன் அருகே வாகனங்கள் மீது வீழ்ந்த மரங்கள்...!!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹமில்டன் அருகே வாகனங்கள் மீது மரங்கள் விழுந்து போக்குவரத்து தடைகள் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவசரகால சேவைகள் நிலைமையை சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் Clarkin சாலை சந்திப்பிற்கு அருகே வாகனங்கள் மீது மரங்கள் விழுந்துள்ளதால், வாகன சாரதிகள் River வீதியை தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இதனிடையே வைகாடோ தொடக்கப் பள்ளியை சூறாவளி தாக்கியதை அடுத்து பள்ளி இன்று மூடப்பட்டது.

North Island இல் கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்ததால், நேற்று பிற்பகல் 3 மணியளவில் Huntly இற்கு கிழக்கே உள்ள Orini ஒருங்கிணைந்த பள்ளியை மினி சூறாவளி தாக்கியது.

இதில் கருவேல மரம் ஒன்று வேரோடு சாய்ந்தில் ஒரு வகுப்பறை மற்றும் நூலகம் சேதமடைந்தன.

Orini ஒருங்கிணைந்த பள்ளி முதல்வர் கிறிஸ்ஸி வேக்மேன்‌, நாளை பள்ளி திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.