Breaking News

'லத்தி' படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

'லத்தி' படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு..!

அறிமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்துள்ள திரைப்படம் 'லத்தி'.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார்.

'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வைரலானது.

சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் 'ஊஞ்சல் மனம் ஆடுமே' வெளியாகி கவனம் பெற்றது.

முதலில் ஆகஸ்ட் 12 ஆம் திகதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த இந்த திரைப்படம் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் லத்தி படத்தின் ரிலீஸ் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, 'லத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 22 ஆம் திகதி கிறிஸ்துமசை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.