Breaking News

மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ‌- நிலவும் அரசியல் குழப்ப நிலை..!!

மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ‌- நிலவும் அரசியல் குழப்ப நிலை..!!

மலேசியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அங்கு தொங்கு நாடாளுமன்றம் அமைவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்துள்ளன. 

கடந்த அக்டோபர் 10 ஆம் திகதி அன்று மலேசியா நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், புதிய அரசைத் தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் நேற்றைய தினம் (19) நடைபெற்றது.

220 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 83 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.

தேசிய கூட்டணி 73 இடங்களுடன் எதிர்பாராத வகையில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 

முன்னாள் பிரதமரும், மலேசியாவின் முதுபெரும் அரசியல்வாதிகளில் ஒருவருமான மகாதேவ் முகமதுவின் கட்சி 30 இடங்களுடன் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.

எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் மலேசியாவில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

எனினும், ஆட்சி அமைப்பதற்காக கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு புதிய அணிகள் உருவாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.