Breaking News

கண்டம் விட்டு கண்டம் தாண்டி உணவு டெலிவரி செய்த தமிழக பெண்...!!!

கண்டம் விட்டு கண்டம் தாண்டி உணவு டெலிவரி செய்த தமிழக பெண்...!!!

தற்போதைய சூழலில் ஒரு டூவிலர் இருந்தால் போதும், டெலிவரி ஏஜென்ட்களாக ஆண்கள், பெண்கள் என யார் வேண்டுமானாலும் அப்பணியை மேற்கொள்ளலாம்.

விரும்பிய உணவுகளை மொபைல் வழியாக ஆர்டர் செய்தால் நாம் தங்கியிருக்கும் முகவரியிலேயே டெலிவரி செய்து விடுகிறார்கள்.

இந்நிலையில் நாடு விட்டு நாடு அல்லது கண்டம் விட்டு கண்டம் கூட உணவு ஆர்டரை டெலிவரி செய்கிறார்கள் என்று கூறினால் நம்ப முடியுமா?

சென்னையைச் சேர்ந்த மானசா கோபால்,சிங்கப்பூரில் இருந்து உணவு ஆர்டரை டெலிவரி செய்வதற்காக நான்கு கண்டங்களில் 30,000 கிமீ தூரம் கடந்து அண்டார்டிகாவின் தொலைதூரப் பகுதி வரை தனது பயணத்தை ஆவணப்படுத்தும் காணொளியை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு அவர் அக்டோபர் 5ஆம் திகதி வெளியிட்ட வீடியோவை 37,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

உணவை டெலிவரி செய்வதற்காக முதலில் மானசா,ஜெர்மனியின் ஹாம்பர்க் நகருக்கும் பின்னர் அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ் அயர்ஸுக்கும் பயணம் செய்தார்.

பின்னர் யூஷாஷியா நகரத்தில் இருந்து, அவர் அண்டார்டிகாவிற்கு விமானத்தில் பயணித்தார்.

உணவைச் சரியான முகவரியில் டெலிவரி செய்வதற்காக நாடு விட்டு கண்டம் விட்டு கண்டம் கடந்து, பனி மற்றும் சேற்றில் நடப்பதைக் காணொளியில் காணமுடிகிறது.

"சிங்கப்பூரில் இருந்து அண்டார்டிகாவுக்கு ஒரு சிறப்பு உணவு விநியோகம் செய்தேன்! @foodpandasg இல் உள்ள நண்பர்களுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்! 30,000+ கிமீ மற்றும் 4 கண்டங்களில் சிங்கப்பூர் சுவைகளை பூமியின் மிகத் தொலைதூர இடங்களுக்கு வழங்குவது தினமும் அல்ல! எங்கள் பசுமையான நண்பர்களுக்காக இணைந்து முழு பயணமும் கார்பன்-ஆஃப்செட் ஆகும்," என காணொளியில் தலைப்பில் கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.