Breaking News

நியூசிலாந்து பாதுகாப்பு அமைச்சர் உக்ரைன் விஜயம் - போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி..!!

நியூசிலாந்து பாதுகாப்பு அமைச்சர் உக்ரைன் விஜயம் - போரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி..!!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த பெப்ரவரி மாதம் போர் தொடங்கிய பின்னர் நியூசிலாந்து அரசாங்க அமைச்சர் ஒருவர் முதன்முறையாக உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்படி நியூசிலாந்தின் பாதுகாப்பு அமைச்சர் பீனி ஹெனாரே உக்ரைனிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மேலும் அவர் போலந்தில் அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் உக்ரைன் தலைநகரமான கீவ் நகரிற்கு சென்ற பாதுகாப்பு அமைச்சர் பீனி அங்கு போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

உக்ரைன் மற்றும் போலந்தில் உள்ள அமைச்சர்களுடனான தனது பேச்சுவார்த்தை, ரஷ்யாவின் சட்டவிரோத படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு நியூசிலாந்தின் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது என அமைச்சர் பீனி தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் பீனி கீவ் நகரில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதனிடையே இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் உக்ரைனில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

அவர் பிரதமராக பதவியேற்ற பின்னர் உக்ரைனுக்கான தனது முதல் விஜயத்தில் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு 50 மில்லியன் பவுண்டுகள் பாதுகாப்பு உதவி வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.