Breaking News

2000 கோடி பட்ஜெட் ஆனாலும் ஷங்கர் படம் வேண்டாம் - கண்டிஷனை பார்த்து தெறித்து ஓடிய ஹீரோக்கள்..!!

2000 கோடி பட்ஜெட் ஆனாலும் ஷங்கர் படம் வேண்டாம் - கண்டிஷனை பார்த்து தெறித்து ஓடிய ஹீரோக்கள்..!!

இந்திய சினிமாவில் தற்போது வரலாற்று சிறப்புமிக்க படங்கள் எடுப்பது அதிகரித்து வருகிறது.

இதற்கெல்லாம் காரணம் ராஜமௌலியின் பாகுபலி படத்தின் வெற்றிதான்.

இதன் விளைவாக தமிழில் பொன்னியின் செல்வன் படத்தை எடுத்து வெற்றி பெற்றார் மணிரத்தினம்.

இதனையடுத்து தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வேல்பாரி படத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் முதலில் கே.ஜி.எஃப் ஹீரோ யஸ் நடிக்கப்போகிறார் இன்று கேள்விப்பட்டபோது தமிழர்கள் ஏன் தமிழ்நாட்டில் வேறு ஹீரோக்கள் இல்லையா என்று கேள்வி கேட்டு வந்தனர்.

ஷங்கர் உடனே சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை பான் இந்தியா மூவியாக எடுப்பதால் ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் ஷங்கருக்கு தமிழ் முகம் கொண்ட நடிகர் வேண்டுமென்று கூறிவிட்டார்.

இப்போது சூர்யா பெயர் மட்டுமே அடிபடுகிறது.வேறு பெரிய ஹீரோக்கள் நடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

காரணம் இந்த படத்தில் நடிக்க ஷங்கர் ஐந்து வருட கால்ஷீட் கேட்கிறார்.

இந்த படம் 3 பாகங்களாக வெளிவருகிறது.

ஒவ்வொரு பாகத்திற்கும் 700 கோடி பட்ஜெட் மொத்தம் 2100 பட்ஜெட் செலவாகிறது.

இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் இந்தியாவில் எடுக்கும் முதல் படம் இதுதான்.

இந்த ஒரு படத்திற்காக பெரிய ஹீரோக்கள் 5வருட கால்ஷீட் கொடுத்தால் சினிமா வாழ்க்கையே மாறிவிடும் என்ற பயம்.

அதனால் இப்பொழுது சங்கர் சூர்யா பெயர் மட்டும் சொல்லியிருக்கிறார் மீதி தமிழ் முகத்திற்கு பெரிய நடிகர்களை எப்படி சம்மதிக்க வைக்கப் போகிறார் என்று தெரியவில்லை. 
ஆனால் இந்த படத்திற்கான 2100 கோடி பட்ஜெட் எப்படி சாத்தியமாகும் என்பது வியப்பாக இருக்கிறது. இந்த படத்தை பற்றி இப்பொழுதே பல செய்திகள் பரபரப்பாக வர தொடங்கியுள்ளன.

இந்தியன் 2 வெளிவந்த பிறகு இந்த படம் தொடர்பான தகவல்கள் உறுதி செய்யப்படும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.