Breaking News

"பறையும்-பரேடும்"-அமெரிக்காவில் தமிழ்நாட்டின் கலக்கல்!

"பறையும்-பரேடும்"-அமெரிக்காவில் தமிழ்நாட்டின் கலக்கல்!

டெக்சாஸ் சான் ஆண்டோனியோவில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி, இங்குள்ள 'ரோலிங் ஓக்ஸ்' மாலின் வெளி பிரதேசத்தில் அனைத்து இந்திய சங்கங்களின் -'இந்தியன் அசோசியேஷன் ஆப் சான் ஆண்டோனியோ' வின் "இந்தியா ஃபெஸ்ட் 2022" விழா,பெருவிழாவாகக் கொண்டாடப் பட்டது.

இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களின் சங்கங்கள் இசை,நடனம்,மாநில அணிவகுப்பு,விதவிதமான உணவுக் கடைகள்,ஆடை-ஆபரண கடைகள் என அங்கே ஏற்பாடுகளை செய்திருந்தனர். அனைத்து மாநிலத்தவர்களும் ஒன்று கூடிக் கொண்டாடும் விழாவாக இருந்தது.

நம் தமிழ்ச் சங்கம் சார்பாக நம் மக்கள் அணிவகுத்து நடந்து வர, அதன் முன்னே நம் பாரம்பரிய 'பறை' இசையை முழங்கியபடி திரு.குமார், சிறுவர்களான  சஞ்சய்,கவின் மற்றும் ஜித்தேஷ் நடனமாடிய படியும் சென்றது அனைவரும் ரசிக்கும் வண்ணம் மிகச் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு விழாவிலும் நம் கலையின் ஓர் அடையாளமான 'பறையிசை' ஒலித்துக் கொண்டே தான் உள்ளது அமெரிக்காவில்!

-ஷீலா ரமணன்