Breaking News

இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்குள் நுழைந்தது கொரோனா

இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்குள் நுழைந்தது கொரோனா

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அதிகாரிக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

இதன்படி, இலங்கை சுகாதார அமைச்சின் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, குறித்த அதிகாரியை சிகிச்சைகளுக்காக, சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிடுகின்றது.

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான அதிகாரி, உயர்ஸ்தானிகராலயத்திற்குள் கடமையாற்றும் அதிகாரி எனவும், அவர் வெளிநபர்களுடன் தொடர்புகளை பேணவில்லை எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறுகின்றது.

உயர்ஸ்தானிகராலயம் முழுவதும் கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.