Breaking News

Invercargill பகுதியில் மூன்று பேரை தாக்கி‌ காயப்படுத்திய 18 வயது இளைஞன் கைது...!!!

Invercargill பகுதியில் மூன்று பேரை தாக்கி‌ காயப்படுத்திய 18 வயது இளைஞன் கைது...!!!

வெள்ளிக்கிழமை இரவு Invercargill பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று பேரை தாக்கிய 18 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Invercargill இன் வடக்கே 
Lorneville இல் Steel சாலையில் உள்ள ஒரு வீட்டில் நடந்த இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

இந்த காயங்கள் கத்தியால் குத்தியதில் ஏற்பட்டவை என்று ஸ்டஃப் இணையதளம் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞன் மீது கடுமையான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் நோக்கில் காயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.