Breaking News

பொன்னியின் செல்வன் பார்க்க குதிரையில் வந்த கூல் சுரேஷ்...!!!

பொன்னியின் செல்வன் பார்க்க குதிரையில் வந்த கூல் சுரேஷ்...!!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி பாஸிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.

திரையரங்குகளில் படத்தை பார்த்து விட்டு வெளியில் வரும் ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் மணிரத்னம் மேஜிக் செய்திருக்கிறார், படம் மெய்சிலிர்க்க வைக்கிறது என பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்காக சென்னை வெற்றி திரையரங்கில் சோழ அரசர்களின் பலமான யானையை கொண்டு வந்து நிறுத்தி வரவேற்பு கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும் விமர்சகருமான கூல் சுரேஷ் குதிரையில் வந்து பொன்னியின் செல்வனுக்கு வணக்கத்தை போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.