Breaking News

யானை வெடிக்கு வருடத்துக்கு 2800 மில்லியன் செலவு !

யானை வெடிக்கு வருடத்துக்கு 2800 மில்லியன் செலவு  !

பயிர்ச்செய்கை வயல்களில் அத்துமீறி நுழையும் யானைகளை விரட்டுவதற்காக மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும்.

 யானை வெடிக்கு வருடாந்தம் 2800 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு வருடத்தில் சுமார் 14 இலட்சம் யானைக் வெடிகளை வாங்குவதற்கு இந்தத் தொகை தேவைப்படுவதாகவும், அவை உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படுவதாகவும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து கிராமங்களை அப்புறப்படுத்த வனவிலங்கு அதிகாரிகளிடம் இருந்து முறையான ஆதரவு கிடைக்கவில்லை என மக்கள் அடிக்கடி குற்றம் சாட்டுவது குறித்து விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய போதே அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

கிராமத்திற்குள் காட்டு யானைகள் தாக்கும் போது மக்கள் வன ஜீவராசி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாலும், எரிபொருள் தடை காரணமாக வனஜீவராசிகள் உத்தியோகத்தர்கள் குறித்த இடத்திற்கு குறித்த இடத்திற்கு செல்வதில் சில சமயங்களில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தற்போது மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், எதிர்காலத்தில் யானை வெடிகளுக்கு தற்போது செலவிடப்படும் தொகையை விட அதிக பணம் செலவிட நேரிடும் என்றும் வனவிலங்கு அதிகாரிகள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.