Breaking News

ராணி எலிசபெத் மறைந்த நிலையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற முக்கிய மாற்றம்

ராணி எலிசபெத் மறைந்த நிலையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற முக்கிய மாற்றம்

மகாராணி எலிசபெத் மறைந்த நிலையில் உலகில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்தானியா பவுண்ட் கரன்சியில் 3ஆம் சார்லஸ் முகம் எப்போது வரும் என்பதற்காக விடை தற்போது கிடைத்துள்ளது.

தற்போது 3ஆம் சார்லஸ் முடிசூட்டப்பட்டு மன்னராக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் தேசிய கீதத்தில் ‘God Save the Queen’ என இதுநாள் வரையில் பாடப்பட்ட நிலையில் ‘God Save the King’ எனத் தற்போது மாற்றப்பட்டு உள்ளது.

 இதுதான் எலிசபெத் மகாராணி மறைவிற்குப் பின் நடந்த முதலும் முக்கிய மாற்றம்.

பிரித்தானியா நாட்டின் மத்திய வங்கியான ‘பாங்க் ஒப் இங்கிலாந்து’ வெளியிட்ட அறிவிப்பில் மன்னர் 3ஆம் சார்லஸ் புகைப்படம் கொண்ட பிரித்தானியா கரன்சி 2024 ஆம் ஆண்டு மத்தியில் புழக்கத்திற்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

விரைவில் பிரித்தானியா கரன்சியில் இடம்பெறப்போகும் 3ஆம் சார்லஸ் மன்னரின் புகைப்படம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும்,

 இந்தப் புகைப்படம் 5, 10, 20, 50 பவுண்ட் கரன்சி நோட்டுகளில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

1960 முதல் ராணி 2வது எலிசபெத் முகம் அந்நாட்டுக் கரன்சியில் உள்ளது. இதேபோல் தற்போது புழக்கத்தில் இருக்கும் எலிசபெத் முகம் கொண்ட கரன்சி அனைத்தும் புழக்கத்தில் இருக்கும், தற்போது இருப்பில் இருக்கும் கரன்சிகளும் புழக்கத்திற்கு வரும்.

மன்னர் 3ஆம் சார்லஸ் புகைப்படம் கொண்ட பிரித்தானியா கரன்சி பழைய மற்றும் கிழிந்த கரன்சிகளுக்கு மாறாக அளிக்கப்பட்டுப் புழக்கத்திற்கு வரும் என்று பாங்க் ஒப் இங்கிலாந்து அறிவித்துள்ளது.