Breaking News

நிகழ்ச்சி மேடையில் தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பாடகி...!!!

நிகழ்ச்சி மேடையில் தலைமுடியை வெட்டி ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பாடகி...!!!

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி பொலிஸார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்த கொடூரமான சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேவேளை, ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு பல நாடுகளில் ஆதரவு பெருகி வருகிறது.

இந்நிலையில் குறித்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு துருக்கி பாடகி ஆதரவு தெரிவித்துள்ளார்.

துருக்கி நாட்டின் பிரபல பாடகி மிலிக் மோசோ. இவர் நேற்று முன்தினம் அந்நாட்டில் நடந்த கலை நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பாடலை பாடிமுடிந்த பின்னர் நிகழ்ச்சி மேடையில் மிலிக் மோசா தனது தலைமுடியை வெட்டி ஈரானில் நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தினார்.