Breaking News

ஆக்லாந்து CBD இல் இடம்பெற்ற தீ விபத்து - சந்தேகத்திற்குரியதாக கருதும் அவசர கால சேவைகள்...!!

ஆக்லாந்து CBD இல் இடம்பெற்ற தீ விபத்து - சந்தேகத்திற்குரியதாக கருதும் அவசர கால சேவைகள்...!!

ஆக்லாந்து CBD இல் இன்று ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு மற்றும் அவசர கால சேவைகள் சந்தேகத்திற்குரியதாக கருதுகின்றன.

இன்று அதிகாலை 3 மணியளவில் Fort Street இல் உள்ள கட்டிடத்தில் ஏற்பட்ட குறித்த தீ விபத்திற்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் வருகை தந்தன.

இதனையடுத்து அதே தொகுதியில் Custom Street கிழக்கில் இரண்டாவது தீ விபத்து இடம்பெற்றது.

இரண்டு தீ விபத்துக்களும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும் தீ பரவுவதற்கு முன்பு தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.