Breaking News

எஞ்சினியரிங் பட்டதாரியான பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

எஞ்சினியரிங் பட்டதாரியான பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் காவியா அறிவுமணி.

சில தினங்களுக்கு முன் காவியா எஞ்சினியரிங் படிப்பை முடித்து பட்டமும் பெற்று இருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் காவியாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சீரியலில் இருந்து காவியா விலகிவிட்டார் என்ற தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது. இது குறித்து பிரபல ஊடகம் ஒன்றுக்கு அவரே விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது, இன்னும் அதிகாரப்பூர்வமாக நான் எதுவும் இது பற்றி சொல்ல முடியாது.

ஆனால், சமீப காலமாக நான் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறேன்.

நான் நடித்த இரண்டு படங்களும் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கின்றது. அந்த படங்களுக்கு பிறகு தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கலாம் என்ற முடிவில் இருக்கிறேன்.

அதேபோல் சில தினங்களுக்கு முன்புதான் நான் படித்து முடித்து பட்டம் வாங்கி இருக்கிறேன். கல்லூரியில் நான் எல்லோரிடமும் சாதாரணமாக தான் இருந்தேன்.

ஆனால், அவர்கள் எல்லோரும் என்னை பார்த்த விதமே வேறு மாதிரி இருந்தது.

எஞ்சினியரிங் ஆகணும் என்று ஆசைப்பட்டு தான் அந்த துறையை தேர்ந்தெடுத்தேன். தற்போது எஞ்சினியரிங் பட்டத்தை வாங்கிய தருணம் ரொம்பவே சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.

அடுத்து மேற்படிப்பு படிக்கணும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. வெள்ளி திரையில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பது மட்டும் தான் என்னுடைய லட்சியம் என்று கூறியிருந்தார்.