Breaking News

பொலிஸாரின்‌ சமிக்ஞைக்கு வாகனத்தை நிறுத்தாமல் சென்ற கும்பல் உறுப்பினர் கைது - துப்பாக்கி மற்றும் கஞ்சாவும் மீட்பு....!!!

பொலிஸாரின்‌ சமிக்ஞைக்கு வாகனத்தை நிறுத்தாமல் சென்ற கும்பல் உறுப்பினர் கைது - துப்பாக்கி மற்றும் கஞ்சாவும் மீட்பு....!!!

கடந்த வெள்ளிக்கிழமை பொலிஸாரின்‌ சமிக்ஞைக்கு வாகனத்தை நிறுத்தாமல்  தப்பியோடிய Nomad கும்பலுடன் தொடர்புடைய ஒருவரை Invercargill பொலிசார் கைது செய்துள்ளனர்.

21 வயதான குறித்த நபர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதுடன் துப்பாக்கி, திருடப்பட்ட வாகனங்கள், தோட்டாக்கள், கஞ்சா உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன.

அவர் மீது துப்பாக்கி மற்றும் வெடிமருந்து வைத்திருந்த குற்றங்கள், விநியோகத்திற்காக கஞ்சா வைத்திருந்தமை, மோட்டார் வாகனம் திருடுதல், திருடப்பட்ட சொத்துக்களை பெற்றுக் கொள்ளுதல் மற்றும் பொலிஸாரின் சமிக்ஞைக்கு வாகனத்தை நிறுத்தத் தவறியமை உள்ளிட்ட பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சவுத்லேண்ட் ஆபரேஷன் கோபால்ட் ஆக்டிங் டிடெக்டிவ் சார்ஜென்ட் அலுன் கிரிஃபித்ஸ், எங்கள் பிராந்தியத்தில் சட்டவிரோதமான நடத்தைக்கு தீர்வு காண எங்கள் உள்ளூர் சமூகங்கள் எங்களுக்கு உதவ வேண்டும் என தெரிவித்தார்.

சட்டவிரோதமான நடத்தை அல்லது கும்பல் செயல்பாடுகள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 111 என்ற எண்ணில், அல்லது 105 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.