Breaking News

உணவுப் பற்றாக்குறையால் பாடசாலைகளில் மாணவர் வருகை குறைந்துள்ளது !

உணவுப் பற்றாக்குறையால் பாடசாலைகளில் மாணவர் வருகை குறைந்துள்ளது !

பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 30-40 வீதம் குறைந்துள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.

உணவுப் பற்றாக்குறை மற்றும் எரிபொருள் பிரச்சினையே பாடசாலை மாணவர்களின் வருகை குறைவதற்கு பிரதான காரணமாக அமைவதாக தெரியவந்துள்ளதாக இலங்கை தேசிய அதிபர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மொஹான் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பால், உணவு வழங்க முடியாமல், தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமல், கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் ஏராளமான குடும்பங்கள் உள்ளன.

ஒவ்வொரு நாளும் பாடசாலைகளின் காலைக் கூட்டங்களில் கணிசமான மாணவர்கள் மயக்கமடைகின்றனர். தகவல்களைத் தேடும் போது உணவருந்தாமல் மாணவர்கள் பாடசாலைக்கு வரும் துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அறுபது சதவீதமான குழந்தைகள் மதிய உணவை பாடசாலைக்கு கொண்டு வருவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துப் பிரச்சினையால் பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் ஆசிரியர்களின் மன உளைச்சல் மாணவர்களையும் பாதிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு.

மதிய உணவு வழங்கும் பாடசாலைகளில் குழந்தைகளின் வருகை 90 வீதத்திற்கும் அதிகமாக காணப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.